fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 மாணவர்களுக்கு உதவித்தொகை துணைவேந்தர் ராம.கதிரேசன் வழங்கினார்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 மாணவர்களுக்கு உதவித்தொகை துணைவேந்தர் ராம.கதிரேசன் வழங்கினார்

சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழக சம வாய்ப்புப் பிரிவு, திருப்பனந்தாள் காசிமடம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கும் விழா புலம் வாரியாக கல்வி உதவித்தொகை உதவி மையம் தொடக்கம், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா பல்கலைக்கழக நூலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டு தமிழ் முதுநிலை 2-ஆம் ஆண்டு பயில்வோர் ஒருங்கிணைந்த 5-ம்ஆண்டு தமிழ் பயில்வோர் என மொத்தம் 55 மாணவர்களுக்கு ஊக்க தொகைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன மேலும் அனைத்துத் துறைகளைச் சார்ந்த 72 ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன் மாணவர்களுக்கு சான்றிதழ் – ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகள் பல்கலைக்கழகம் மற்றும் அரசு மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சுய உதவிப் பாடப்பிரிவுகள், நுண்கலைப்புலம் ஆகியவற்றில் பயிலும் எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களுக்கு ‘போஸ்ட் மெட்ரிக்’ கல்வி உதவித்தொகை மூலம் 2021- 22-ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் முழு கட்டணம் பெற்று தரப்படுகிறது.

அரசின் ஆணையை செயல்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு கல்வி கட்டணம், சிறப்பு கல்விக் கட்டணத்தில் விலக்கு
அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சம வாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் த.தெய்வசிகாமணி வரவேற்று பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கோ.வரதன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img