Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலை. துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசனுக்கு கௌரவ் கர்னல் பதவி நிலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தேசிய மாணவர் படை துணை இயக்குநர் கமோடர் எஸ்.ராகவ் கௌரவ கர்னல் பதவி நிலையை வழங்கிப் பேசினார். புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்னல் ஆர்.ஆர். மேனன் பங்கேற்று வாழ்த்தினார்.

என்சிசி பட்டாலியன் குழுக்களின் காமாண்டிங் அலுவலர்கள் வாசுதேவன், சீனிவாசராவ்,என்சிசி அலுவலர் கனகராஜன்,சீமான், சேவி,ரவி,பாலமுரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலம்,அதன் உறுப்புக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் வெற்றிக்கும் செயல்பாட்டுக்கும் வித்திடும் விதமாக செயலாற்றிய துணைவேந்தர் சீரிய வழிகாட்டு தல், ஊக்கத்தைப் பாராட்டும் விதமாக இந்த கௌரவ கர்னல் நிலை வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img