fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கர் நினைவு நாள் விழா

அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கர் நினைவு நாள் விழா

அம்பேத்கரின் 67-வது நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் சௌந்திரராஜன் வரவேற்றார்.

அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு முக்கிய விருந்தினர்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய மொழிப்புலமுதல்வர் முத்துராமன் வாழ்த்துரை வழங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கி பேசும்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்பதற்காகவே நிறுவப்பட்ட பல்கலைக் கழகம் என்றார்.

சிறப்பு விருந்தினராக பேராசிரியர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்
சாரோன் நினைவுப் பேருரையாற்றினார். டாக்டர். அம்பேத்கர் இருக்கையின் துணைபேராசிரியை ராதிகா ராணி நன்றி கூறினார்.

துணை வேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img