சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் இன் ஜினியரிங் கல்லூரியின் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவு புதிய தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்கள் இணைப்பு நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது.
இதில் ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை சவீதா பல்துறை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு பூங்கா செய்திருந்தது.
இது புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இணைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. கண்காட்சியில் இக்கல்லூரி மாணவர்களின் 100-க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள், அவர்களின் பன்முகத்தன்மை, பல்துறை திறன்கள் மற்றும் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலான தயாரிப்புகள் என பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
மயூரா ஆட்டோமேஷன் அன்ட் ரோபோடிக் சிஸ்டம்ஸ்
சிறப்பு விருந்தினர்களாக மயூரா ஆட்டோமேஷன் அன்ட் ரோபோடிக் சிஸ்டம்ஸ் நிறுவனர் ஹரிஹர சுப்ரமணியன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி, இன்பேன்ட் என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமி டெட்டின் நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.
15-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்று மாணவர்களின் தயாரிப்புகளை பாராட்டி, ஊக்கப்படுத்தினர். “தொழில்முனைவோர் எந்தவொரு நாட்டிற்கும் சொத்துக்கள். அவர்களால் பொருளாதாரம் மேம்படும்.
புதிய கண்டுபிடிப்புகள், வேலை உருவாக்கம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு அவர்கள் பங்களிக்கிறார்கள்.
இதுபோன்ற கண்காட்சிகள் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவைப் பாராட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறந்த வழியாகும்” என்றார் சிமாட்ஸ் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன். சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் இயக்குனர் ரம்யா தீபக் உள்ளிட்டோர் பாராட்டினர்.