fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு

கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு

கேபிஐடி டெக்னாலஜிஸால் புனேவில் நடத்தப்பட்ட, கேபிஐடிஸ் பார்க்கில்-2024 (10வதுபதிப்பு) என்ற சர்வதேச அளவிலான இன்னோவேஷன்கான டெஸ்ட்டில், உலகெங்கிலும் உள்ள 433 நிறுவனங்களின் 19765 பங்கேற்பாளர்களிடமிருந்து 1324 யோசனைகளைப் பெற்றது. அவற்றில் 8 யோசனைகள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 8 அணிகளில் ஒன்றாக பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஜி-ரெக்ஸ் என்ற அணி பங்கேற்றது.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் கே.நித்தியானந்தன் வழிகாட்டுதலின் கீழ் ரூபக், வெங்கடேஷ், மனோஜ் தர்ஷனா, மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோர் இந்த குழுவில் பங்கேற்றனர்.

ஜி-ரெக்ஸ் குழுவால் “ஆன்போர்டு ஹைட்ராக்ஸி வாயு உற்பத்தி அமைப்பு” என்ற தலைப்பில் திட்டயோசனை முன் மொழியப்பட்டது. அவர்கள் மிகவும்மதிப்பு மிக்க பிளாட்டினம் விருதை ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசுடன் வென்றனர்.

கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் வி.பாலுசாமி, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைத் தலைவர் சி.ஜெகதீசன் மற்றும் ட்ரிப்பிள்ஈ துறைத் தலைவர் எம்.கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்ற குழுவினரை பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img