fbpx
Homeபிற செய்திகள்கோவை சி.எஸ்.ஐ. ஆல்சோல் சர்ச் வளாகத்தில் நாளை மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு, வளர்ச்சி, கல்வி முன்னேற்றம்...

கோவை சி.எஸ்.ஐ. ஆல்சோல் சர்ச் வளாகத்தில் நாளை மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு, வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல்சோல் சர்ச் வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு, வளர்ச்சி, கல்வியின் முன்னேற்றம் குறித்த CSI Edu connect 2026 நிகழ்ச்சியானது மே 2-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீட்டு விழா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தென்னிந்திய சர்ச் டைசன் அலுவலகத்தில் நடந்தது. போஸ்டரை தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலம் பிஷப் பிரின்ஸ் கால்வின் வெளியிட்டார். அப்போது டாக்டர் அருமைராஜ் (இயக்குனர், சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி), அமிர்தம் (பொருளாளர்) ஆகியோர் உடன் இருந் தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி சொற்பொழிவாளர் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் நேரடி யாக கலந்துரையாடுகிறார்.

பின்னர் செய்தியாளர் களை சந்தித்து பேசிய பிஷப் பிரின்ஸ் கால்வின்:- கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச் சியாக சிஎஸ்ஐ திருச்சபை சார்பில் கல்விப்பணிகள் செய்து வருவதாகவும் இதில் மலைவாழ் மக்கள், இருளர் போன்ற சமுதாய மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து கல்வி யில் சிறந்து விளங்குவதற்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார்.

இந்த CSI Edu connect2026 நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்வி மாணவர்கள் கலந்து கொள்ள போவதாகவும் அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு, வளர்ச்சி குறித்து அறிவுரை வழங்கி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு நோக்கமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குறிப் பாக மலைவாழ் மக்கள், இருளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைவார்கள்என்றும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். அனைவ ருக்கும் அனுமதி இலவசம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img