Homeபிற செய்திகள்ஆர்.சி.சி. சாய்சிட்டி சார்பில் ஓணம் குடும்ப விழா

ஆர்.சி.சி. சாய்சிட்டி சார்பில் ஓணம் குடும்ப விழா

ஆர்.சி.சி. சாய்சிட்டி சார்பில் ஓணம் பண்டிகையையொட்டி குடும்ப ஒன்று கூடல் நிகழ்ச்சி, கோவை தி கிராண்ட் ரீஜென்டில் நடந்தது. இதில் 23 ரோட்டேரியன்கள், குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு தலைவர் டாக்டர் ஆர். பாலமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெ. பாலாஜி, கிளப் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சேவைப் பணிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியில் ஆர்.சி.சி. அக்ருதியைச் சேர்ந்த ரோட்டேரியன் ஏ.கே.எஸ்.எப்.ஆர்.சி. லீமா ரோஸ் மற்றும் ரோட்டேரியன் கவிதா ஆகியோர் ஆர்.சி.சி. சாய்சிட்டியின் கௌரவ உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் கமலேஷ் ரஹேஜா இருவருக்கும் ரோட்டரி முள் சின்னம் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஓணம் சத்யா விருந்து நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img