கோவையில் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60-வது ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் முதல்முறையாக பெண்களுக்கான போட்டி, ஆக.26 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.
பிஎஸ்ஜி தொழில்நுட் பக் கல்லூரி சர்வதேச உள் விளையாட்டு அரங்கில் மாலை நேரங்களில் போட்டிகள் நடைபெறும். ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, இந்திய கப்பற்படை, ஓஎன்ஜிசி, கேரள மின்வாரியம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள் ளிட்ட 7 அணிகளும், பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கேரள மின்வாரியம், கோவை மாவட்ட மகளிர் அணி என 4 அணிகளும் பங்கேற் கின்றன.
ஆண்கள் பிரிவில் முதல்பரிசு ரூ.1 லட்ச மும், பெண்கள் பிரிவில் ரூ.75 ஆயிரமும் வழங்கப்படு கிறது.
ஆக.26 மாலை 5 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் பாரத ஸ்டேட் வங்கி கோவை மண்டல மேலாளர் ஆர்.ஆர். காயத்ரி போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.



