fbpx
Homeபிற செய்திகள்கோவை அம்ருதாவின் பசுமை திட்டத்தில் ஒன்றிணைந்த 7 நாடுகளின் நிபுணர்கள்

கோவை அம்ருதாவின் பசுமை திட்டத்தில் ஒன்றிணைந்த 7 நாடுகளின் நிபுணர்கள்

அம்ருதா விஸ்வ வித்யாபீடம், கோவை வளாகம் சார்பில் நிலைத்தன் மையில் கவனம் செலுத்திய ஒரு சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. மேம்பட்ட பொருட்கள், பியூர் எனர்ஜி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உலகளாவிய தலைவர் களை இந்த விழா ஒன்றிணைத்தது.

இந்நிகழ்வில் இந்தியா, அமெ ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகள் என 7 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் 27 சிறப்புரைகளை வழங்கினர், அதே நேரத்தில் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் 73 வாய்மொழி ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 34 சுவரொட்டிகளை, நவீன கண்டு பிடிப்புகளை வழங்கினர்.

இரசாயன பொறியியல் மற் றும் பொருள் அறிவியல் துறை, மேம் பட்ட பொருட்கள் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களில் உள்ள சிறப்பு மையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.

பங்கேற்பாளர்களில் ஐஐடிகள், சிஎஸஐஆர் ஆய்வகங்கள், பிஏஆர்சி, ஷெல் இந்தியா மற்றும் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஈபிஎஃப்எல் சுவிட்சர்லாந்து, கிரோனிங்கன் பல்கலைக்கழகம், என்டியுட்டி தைவான் போன்ற முன்னணி பல் கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் அடங்குவர்.

இம்மாநாடு 25-க்கும் மேற்பட்ட புதிய கல்வி மற்றும் தொழில் ஒத்து ழைப்புகளை உருவாக்கியது, இதில் கூட்டு முனைவர் பட்ட திட்டங்கள், ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் அமெ ரிக்க நிறுவனங்களுடன் இரட்டை பட்டம் முன்முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்கள் அடங்கும்.

இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட பல ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகள் இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஹைட்ரஜன் எனர்ஜி, என்விரான் மென்டல் சயின்ஸ் அண்ட் பொல் யூஷன் ரிசர்ச் மற்றும் ஜர்னல் ஆஃப் பிஸிக்ஸ் டி: அப்ளைடு பிஸிக்ஸ் போன்ற முன்னணி இதழ்களில் வெளிவர உள்ளது.

பொறியியல் துறை டீன் டாக்டர் சசாங்கன் ராமநாதன், (எம்ஜி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்) பேராசிரியர் சாபு தாமஸ் மற்றும் (சியாட் டயர்ஸின் ஆர்என்டி மூத்த துணைத் தலை வர்) ரெஞ்சி ஐசக் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது.

சுமார் 120க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட சூரிய ஆற்றல் மற்றும் மின்வேதியியல் நுட்பங்கள் குறித்த நடைமுறைப் பட்டறைகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img