fbpx
Homeபிற செய்திகள்அமேசான் ஒரிஜினல் ஸ்டோரீஸ் ரியலாக படிக்க ‘கிண்டல்’ அறிமுகம்

அமேசான் ஒரிஜினல் ஸ்டோரீஸ் ரியலாக படிக்க ‘கிண்டல்’ அறிமுகம்

அமேசான் இன்று நெக்ஸ்ட் ஜெனரேஷன் புத்தம்புதிய கிண்டல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இலகுவான மற்றும் மிகவும் கச்சிதமான கிண்டல். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சிரமமின்றி படிக்க வழிவகுக்கும்.

ஆல்-நியூ கிண்டல் ஆன இது 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.9,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தம் புதிய கிண்டல் ஆனது 300 ppi உயர் தெளிவுத்திறன் கொண்ட 6-இன்ச் டிஸ்ப்ளே, USB-C சார்ஜிங், ஆறு வாரங்கள் வரை பேட்டரி ஆயுள் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு இடமளிக்கும் வசதி உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களுடன் மலிவு விலையில் கிடைக்கிறது. அறிய http://www.amazon.in/kindle.

.
அமேசான் டிவைசஸ் இந்தியாவின் இயக்குநரும், மேலாளருமான பராக் குப்தா கூறுகையில், இந்த கிண்டல் பதிப்பை இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்களின் மகத்தான மின்-புத்தகங்களை வாடிக்கையாளர்கள் எப்படிப் படித்து மகிழ்கிறார்கள் என்பதைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

பிரைம் ரீடிங்

பிரைம் ரீடிங் – பிரைம் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான தகுதியுள்ள மின்புத்தகங்களின் சுழலும் பட்டியலிலிருந்து கூடுதல் கட்டணமின்றி படிக்கலாம். அமேசான் ஒரிஜினல் ஸ்டோரீஸ் – பிரைம் மற்றும் கிண்டில் அன்லிமிடெட் உறுப்பினர்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல், அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்கள் மற்றும் பாராட்டப்பட்ட கதைசொல்லிகளின் மிகத் தகுதியான சிறுகதைகள் மற்றும் புனைகதை அல்லாதவற்றைப் படிக்க முடியும்.
ஆல்-நியூ கிண்டில் ஆனது இந்தியாவில் ரூ.8,999 அறிமுக விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே இந்த சலுகை விலை செல்லுபடியாகும்.

அதன்பிறகு, 9,999 ரூபாய் எனும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். http://www.amazon.in/kindle -ல் கருப்பு மற்றும் டெனிம் வண்ணங்களில் சாதனத்தை வாங்கலாம். கிண்டிலுக்கான புதிய துணி கவர்கள் கருப்பு, ரோஸ், டெனிம், டார்க் எமரால்டு ஆகிய நிறங்களில் 1,799 ரூபாய்க்கு கிடைக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img