ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை அனுசரிக்கப்படும் தேசிய கண் தான அரைத்திங்கள் அனுசரிப்பையொட்டி, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
தலைமை விருந்தினர் சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் – போக்குவரத்து, சென்னை கிழக்கு, சமாய் சிங் மீனா பேசியதாவது: கண்களை தானமாக வழங்குவதும் மற்றும் கண் பாதிப்பினால் அவதியுறும் எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையில் திரும்பவும் வெளிச்சத்தை கொண்டுவருவதும் கூட்டுப்பொறுப்பாகும்.
சமூகத்திலிருந்து கருவிழி பாதிப்பினால் ஏற்படும் பார்வைத் திறனிழப்பை முற்றிலுமாக அகற்று வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம் என்றார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் அதியா அகர்வால் கூறியதாவது: பார்வைத்திறன் என்ற பரிசுக்கு நிகரானது எதுவுமில்லை. கருவிழி பாதிப்பினால் ஏற்படும் GøIN இழைம பார்வையிழப்பினால் அவதியுறும் நபர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் திறனை கண் தானம் கொண்டிருக்கிறது.
ஒருவரது கண்களை இறப்பிற்கு பிறகு தானமாக வழங்குவது என்பது வெறுமனே ஒரு மருத்துவ செயல்முறை மட்டும் அல்ல; கண்ணை தானமாக வழங்குவதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வைத்திறனை வழங்கும் அற்புதமான பரிசாக இது இருக்கிறது என்றார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் வங்கியின் மருத்துவ இயக்குநரும், கருவிழி சிகிச்சையில் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர் பிரீத்தி நவீன் கூறியதாவது:
உலகெங்கிலும், பார்வைத்திறன் குறைபாடுகளினால் ஏறக்குறைய 40 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 8 மில்லியன் என்ற மிகப்பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுள் 1.3 மில்லியன் நபர்கள் கருவிழி பாதிப்பினால் ஏற்பட்ட GøIN இழைம பார்வையிழப்பின் (Corneal blindness) காரணமாக பார்வையை இழந்தவர்கள் இந்த நபர்களுக்கு முற்றிலுமாக பார்வைத்திறனிழப்பு ஏற்படாமல் தடுக்க ஓர் ஆண்டுக்கு சுமார் 1.3 லட்சம் கருவிழிகள் கண் மருத்துவமனைகளுக்கு தேவைப்படுகின்றன என்றார்.