காட்டூர் ஊராட்சி பகுதியில் இரு கழிப்பறை வளாகங்களை அதானி ஃபவுண்டேஷன் உருவாக்கி, அவற்றை காட்டூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாக அதிகாரிகளும் மற்றும் அதானி ஃபவுண்டேஷனின் அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்பு வரை மீஞ்சூர் வட்டத்தைச் சேர்ந்த காட்டூர் காலனியில் வசித்து வருகிற சுமார் 756 குடும்பங்கள், போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இதன் காரணமாக ஏற்படுகிற உடல்நல பிரச்சனைகளும் இப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்து வந்தன.
இதை கருத்தில் கொண்டே அதானி ஃபவுண்டேஷன் இந்த சமூக கழிப்பறைகளை இப்பகுதி மக்களின் நலனுக்காக கட்டித் தர முடிவெடுத்து செயல்படுத்தியிருக் கிறது. காட்டுப்பள்ளி துறைமுகத் தில் அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் அதானி ஃபவுண் டேஷன் குழுவினர், அடித்தள அளவில் கிராம மக்கள் எதிர்கொள்கிற சிரமங்களையும், பிரச்சனைகளையும் புரிந்து கொள் வதற்காகவும் மற்றும் அவைகளுக்கு தீர்வு காணவும், அவர்களோடு கலந்துரையாடி இணைந்து செயல் படுகிறது இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை புரிந்துகொண்ட அதானி ஃபவுண்டேஷன், காட்டூர் ஊராட்சியின்கீழ் வரும் காட்டூர் காலனி பகுதிகளில்சமூக கழிப்பறைகளை கட்டித்தர முன்வந்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்டு கிராமப்புற சமூகங்களில் சுகாதார பராமரிப்பை மேம்படுத்தும் செயல் திட்டத்தின்கீழ் இந்த கழிப்பறைகள் கட்டுமானத் திட்டம் மேற் கொள்ளப்பட்டன.
பெண்களுக்கான சமூக கழிப்பறை வளாகத்தை அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் முனைய தலைவர் ராம்டே கரஞ்சியா, அதானி ஃபவுண்டேஷனின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்திர சேகர் கௌடா ஆகியோர் திறந்து வைத்த னர். விழாவில், காட்டூர் ஊராட்சித் தலைவர் கே.சி.செல்வராமன் பேசும் போது, “எமது பகுதி பெண்களுக்கு கழிப்பறைகளை கட்டித்தர தாராள மனதுடன் முன்வந்திருக்கும் அதானி ஃபவுண்டேஷனுக்கு மனமார்ந்த நன்றி.
பராமரிப்பதற்கு உரிய பணி யாளர்களை நியமனம் செய்வதன் மூலம் இக்கழிப்பறைகள் தூய் மையாக பராமரிக்கப்படும் என் பதற்கான உறுதி மொழியை வழங் குகிறேன்,” என்றார்.
காட்டூர் ஊராட்சி துணைத் தலைவர் ரேவதி சண்முகம், வார்டு கவுன்சிலர், நந்தினி நீலவண்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
கிராம தலைவர்கள், வார்டு உறுப்பினர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.