மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் தருமபுரியில் ஊரக ஊடகவியலாளர் பயிலரங்கம் நேற்று நடைபெற்றது.
இப்ப பயிலரங்கை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது “மத்திய மாநில அரசுகள் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து ஊடகங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டம் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள மாவட்டம். மாவட்டத்தில் வேளாண் சார்ந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒரு வளரும் மாவட்டமாக இருந்தாலும், பெண் சிசுக்கொலை, இளம் வயது திருமணம், அதிக எண்ணிக்கையிலான மகப்பேறு பெற்றுக் கொள்வது போன்ற பிரச்சினைகளால் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. இது தொடர்பாக ஊடகங்கள் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு திட்டங்களில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், பொதுமக்களிடமும் அவர்களின் பொறுப்புணர்வுகளை பத்திரிகைகள் சுட்டிக் காட்ட வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் சார்பில் குக்கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகங்களில் பல்வேறு நாளிதழ்கள் கிடைக்கப்பெறுகிறது.
கிராமப்புறங்களைச் சார்ந்த பொதுமக்கள் இந்த நாளிதழ்களை தொடர்ந்து படித்து வருகின்றனர். செய்தியாளர்கள் இதை கருத்தில் கொண்டு தங்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் உண்மையான செய்தி களையும், மத்திய மாநில அரசின் நல திட்டங்கள் குறித்த செய்திகளையும் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று பேசிய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை” கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு அச்சு ஊடகங் கள் மட்டுமே செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பணியினை செய்து வந்தது. உண்மைத் தன்மையோடு அப்போது செய்திகள் மக்களை சென்றடைந்தது. இதனோடு வானொலியும், தொலைக்காட்சியும் உண்மையான செய்திகளை வெளி யிட்டு வந்தது.
தற்போதைய சூழலில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிக அளவில் பெருகிவிட்டன. இவற்றில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ அதே அளவிற்கு வேறு சில விளைவுகளும் ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக யார் வேண்டுமானாலும் ஒரு செய்தியினை சமூக ஊடகத்தின் வழியே பரப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மூலம் உண்மையான செய்திகளை விட வதந்திகள் அதிக அளவில் பரப்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வதந்திகளை தவிர்த்து உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இத்த கைய பயிலரங்குகளை மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங் களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஊடகங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வி.ஜான்சிராணி, வேளாண்மை இணை இயக்குனர் கே.விஜயா உள்ளிட்டோர் அரசு திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அக்னி பாதை- பாதுகாப்புத்துறை தொழில் வழித்தடம் குறித்து பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அலுவலர் எம்.பொன்னியின் செல்வன் எடுத்துரைத்தார்.
இப்பயிலரங்கில் மத்திய மக்கள் தொடர்பு புதுச்சேரி துணை இயக்குனர் முனைவர் சிவக்குமார், தருமபுரி களவிளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் மற்றும் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஊடகவியலா ளர்கள் பங்கேற்றனர்.