fbpx
Homeபிற செய்திகள்அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையம் மூலம் தமிழ்நாட்டிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதி 500 மில்லியன் யுஎஸ் டாலரை...

அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையம் மூலம் தமிழ்நாட்டிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதி 500 மில்லியன் யுஎஸ் டாலரை கடக்கும்

சமீபத்தில் கையெழுத்தாகி செயல்பாட்டிற்கு வந்த இந்தியா – ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தம், அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்திலிருந்து தனது செயல்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தில் ஏறக்குறைய 90% இத்துறைமுக முனையத்திலிருந்து மேற்கொள்ளப்படும்.

ECTA – ன் கீழ், ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்படும் ஏற்றுமதி பொருட்கள் /சரக்குகளுக்கு 100% முன்னுரிமை அணுகு வசதியினால் இந்தியா பயன்பெறும்.
ECTA – ன் கீழ், தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளை அனுப்பி வைக்கும் விழா, அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தில் நடைபெற்றது.

FIEO – ன் முன்னாள் தலைவர் இஸ்ரார் அஹமது, சென்னை, ITS -ன் வெளிநாட்டு வர்த்தக இணை தலைமை இயக்குனர் BN விஸ்வாஸ், சென்னை, சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் பாலாஜி IRS, செயிண்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் -நிர்வாக இயக்குனர் AR. உன்னிகிருஷ்ணன், அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தின் தலைவர் ராம்டே கராஞ்சியா, அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தின் விற்பனை பிரிவு தலைவர் விவேக்நாயர் மற்றும் DGFT, FIEO மற்றும் எண்ணூர் துறைமுகத்தின் முதுநிலை அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சரக்குகளை அனுப் பும் முன்னணி ஏற்றுமதியாளர்கள் முன்னி லையில் ஏற்றுமதி சரக்குகளை அனுப்பும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் 17-வது பெரிய பார்ட்னராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் 9-வது பெரிய வர்த்தக பார்ட்னராக இந்தியா இருக்கிறது.

சரக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள்

சரக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2021-ம் ஆண்டில் $27.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியா விற்கான இந்தியாவின் ஏற்றுமதிகள், கடந்த பல ஆண்டுகளில் கனிசமாக அதிகரித்திருந்தாலும் கூட, ECTAன் கீழ் இதில் அதிகரித்த முன் னேற்றத்திற்கு சிறப்பான வாய்ப்பு இருக்கிறது.

ECTAன் கீழ், ஆஸ்திரேலிய சந்தையில் இதுவரை நுழைந்திடாத பகுதிகளுக்கு முன்னுரிமையுடன் கூடிய அணுகுவசதியை பெறுகின்ற நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் இப்போது இருக்கின்றனர்.

2022 டிசம்பர் 29-ம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் ECTA, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக, குறு – சிறு – நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கு (MSME) உதவும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சந்தையில் சிறப்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இந்நி றுவனங்கள் பயன்படுத்தி, பலன் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதே இதற்கு காரணம்.

ஆஸ்திரேலியாவின் இறக்குமதியின் அதிக பங்கினைப் பெறுவதற்கு இப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள். மருந்து தயாரிப்புகள், ஆபர ணங்கள், வாகனங்கள் மற்றும் வேளாண் தயாரிப்புகள் ஆகியவற்றில் இந்தியாவின் வலுவான சாதக அம்சங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அரிசி, ஜவுளிகள் மற்றும் ஆடைகள், கைத்தறி தயாரிப்புகள், லெதர் பொருட்கள், ஆர்கானிக் வேதிப்பொருட்கள், பொறியியல் மற்றும் ஃபுளோட் கிளாஸ்கள் உட்பட கட்டுமானப் பொருட்கள், மசாலா நறுமணப் பொருட்கள் ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும்.

2022 டிசம்பர் 29 முதல், செயல்பாட்டிற்கு வரும் வகையில் ECTA – ஐ வெற்றிகரமாக அமலாக்கம் செய்திருப்பதற்காக இந்திய அரசை பாராட்டிய FIEO அமைப்பின் தலைவர் டாக்டர். சக்திவேல், கைத்தறி துறைக்கான நல்ல வாய்ப்புகளோடு, ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறும் என்று குறிப்பிட்டார்.

குறைந்த காலஅளவிற்குள், தமிழ் நாட்டில் மிகப்பெரிய சந்தைப் பங்கினை பெறக்கூடிய பிற துறைகளுள் ஜெம்ஸ் (நவரத்தின கற்கள்) மற்றும் ஆபரணங்கள், லெதர் மற்றும் லெதர் அல்லாத காலணிகள் பிரிவு, ஆட்டோ பாகங்கள் மற்றும் பொறியியல் தயாரிப்புகள் ஆகியவையும் இடம்பெறும்.

நிதியாண்டு 21-22 -ன் போது, தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதி மதிப்பு 384 மில்லியன் யுஎஸ் டாலராக நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலஅளவில் தமிழ்நாட்டின் ஏற்றுமதியானது, ஏற்கனவே 322 மில்லியன் யு.எஸ். டாலர் என்பதை எட்டியிருக்கிறது.

எனவே, இந்த நிதியாண்டின்போது மொத்தத்தில் 500 மில்லியன் யுஎஸ் டாலர் என்ற அளவை இது கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img