fbpx
Homeபிற செய்திகள்பிஷப் திமோத்தி ரவீந்தருடன் ஜமாத், குருத்வாரா நிர்வாகிகள் சந்திப்பு- புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்

பிஷப் திமோத்தி ரவீந்தருடன் ஜமாத், குருத்வாரா நிர்வாகிகள் சந்திப்பு- புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்

கோவை தாவூதி போஹ்ரா ஜமாத்தின் தலைவர் சையத்னா ஆலிகாதிர் முஃபத்தல் சைபுதீன் சார்பாக, ஜனாப் அமில் சாப் ஷேக் மொயிஸ் மூன், சிஎஸ்ஐ பிஷப் திமோத்தி ரவீந்தரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சமூக சேவை மற்றும் நலஉதவிகள்

சமூக சேவை மற்றும் நலஉதவிகள் வழங்குதல் போன்றவற்றை ஊக்குவிப்பதென்றும் கோவையில் வகுப்புவாத நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துவது என்றும் இருவரும் ஒப்புக்கொண்டனர். முன்னதாக ஆயருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

அதேபோல புத்தாண்டை முன்னிட்டு குருத்வாரா சிங் சபாவின் தலைவர் குர்பிரீத் சிங் மற்றும் செயலாளர் இக்பால் சிங் ஆகியோர் சிஎஸ்ஐ பிஷப் திமோத்தி ரவீந்தரைச் சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

கோவையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவது என்று அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பிச்சைக்காரர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியை மேற்கொள்வது குறித்து விவாதித்தனர். முன்னதாக ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img