fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தினவிழா கொண் டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் துணைத்தலைவர் மருத்துவர் ஆர்.குமாரசுவாமி தலைமையேற்று உரையாற்றினார்.

மேலும் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் மற்று மொரு துணைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தம், கல்லூரின் முதல்வர் முனைவர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழக மேலண்மைத்துறையின் (தொழில் முனைவோர்) இணைப்பேரசிரியர் முனைவர்.ஜி.பரணி, பெங்களூர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மூத்த செயல் நிர்வாகி கே.தீபன் சக்ரவர்த்தி கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் நூல் வெளியிட்ட சாதனை புரிந்த ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

மேலும் அவர் தனது சிறப்புரையில் கல்லூரியுடனான பயின்ற காலத்து அனுபவங்களை நினைவு கூர்ந்தார். தாங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரி நிர்வாகத் திற்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறியதோடு தற்போது பயிலும் மாணவர்களும் அப்படியான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் பல்துறைகளிலும் வல்லுனர்களாக உயர்ந்து கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img