தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக, ரேடியோ மிர்ச்சி சார்பில் ‘தி ராயல் ஹீரோஸ்’ என்ற தலைப்பில் ராயல் கேர் மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் டாக்டர் கௌரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் ரி. மாதேஸ்வரனுக்கு ‘Visionary Leader In Health Care’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் ராயல் கேர் மருத்துவமனையின் 37 மருத்துவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.