fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்துள்ளது காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவையில் கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்துள்ளது காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களில் சிறப்பாக பணியாற்றிய 100 காவலர் களுக்கு விருது வழங்கும் விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று காவல் துறையினருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: சைபர் கிரைம் பொருத்தவரை 1030 என்ற எண்ணில் குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் புகார் அளித்தால் குற் றவாளிகளை கண்டு பிடிக்க எளிதாக இருக்கும். ட்ரோன் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு கோணத்தில் பார்க்கும் பொழுது விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப வளர்சிக்கு தகுந்தபடி காவல்துறையினர் குற்றங் களை தடுப்பதற்கும் குற் றவாளிகளை கண்டு பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழக அரசின் உத்த ரவின்படி காவலர்க ளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிப்பதால் காவல்துறையினரின் பணிச்சுமை சற்று குறைந்துள்ளது.
காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு காவல்துறை யினருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவையைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டிற்கு 30 முதல் 32 கொலைகள் என்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அது 40 சதவீதமாக குறைந்து 21 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

அதேபோல் கோவை மாநகரத்தில் போக்கு வரத்தை சீரமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பலனாக விபத்துக்கள் குறைந்துள்ளது.
ஆம்புலன்ஸ் செல்வதற்கான நேரம் கடந்த ஆண்டு 11.4 நிமிடங்களாக இருந்தது தற்போது 7.4 நிமிடங் களாக குறைந்துள்ளது. இதனால் ஒரு உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கோவை மாநகரத்தில் போக்குவரத்து சிக்னல்கள் நீக்கப்பட்டு யுடர்ன் முறை அமல்படுத்திய பிறகு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

முக்கியமான பகுதிக ளில் ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் முதற்கட்டமாக 110 கேமராக்கள் பொருத்தப் பட்டு இரண்டாம் கட்டமாக கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகி றோம். மேலும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் பதிவிடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் சட்ட ஆலோசனையின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகி றோம். அது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img