fbpx
Homeபிற செய்திகள்அரசு பள்ளி வகுப்பறைகளுக்குள் புகுந்த மழை நீர்

அரசு பள்ளி வகுப்பறைகளுக்குள் புகுந்த மழை நீர்

மேட்டுப்பாளையம் வட்டம், மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மம்பாளையம் கிராமத்தில் அரசு ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணி துவங்கி ஏழு மணி வரை சுமார் மூன்று மணி நேரம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் மழை நீர் இப்பள்ளியை சூழ்ந்தததோடு ஆறு மற்றும் ஏழாம் வகுப்பறைகளுக்குள் தண்ணீர் தேங்கியது.

இதனால் இந்த வகுப்பறைகளில் பாடம் நடத்த இயலாத சூழலில் இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மருதூர் ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வகுப்பறைகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த ஆட்களை அனுப்புவதாக ஊராட்சி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த இரு வகுப்பறைகளில் பயிலும் 32 மாணவர்கள் பள்ளியின் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் அமர வைக்கப்பட்டு ஊராட்சி ஊழியர்கள் வருகைக்காக ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

ஆனால், தகவல் தெரிவித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் யாரும் வராததால் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வகுப்பறைகளுக்குள் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் வேலைக்கு பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனிடையே மாணவ மாணவியருக்கு பள்ளியின் எதிரே உள்ள புதிய கட்டிதத்தில் வைத்து வழக்கம் போல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

படிக்க வேண்டும்

spot_img