fbpx
Homeபிற செய்திகள்சிறந்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கிய ஏபிடி மாருதி

சிறந்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கிய ஏபிடி மாருதி

ஆனைமலை ஏபிடி மாருதி சார்பாக சுற்றுச்சூழல் மாசுபாட்டினை பாதுகாக்கும் வகையில் மகிழம் மரம் நடுதல், பழ மரக்கன்றுகள் வழங்குதல், உறுதி மொழி எடுத்தல், நினைவுப் பரிசு வழங்குதல், முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை, கூட்டுறவு வங்கி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றது.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் அழகு ராஜலட்சுமி, கூட்டுறவு வங்கி மேலாளர் அமுல்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் கனக ராஜன், சுந்தரம் பைனான்ஸ் மேலா ளர் சத்திய நாராயணன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். மேலும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img