சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ் நிறுவனம், கோவை ஆர்.எஸ். புரத்தில் புதிய நகை விற்பனையகத்தைத் தொடங்குகிறது. 47 ஆண்டுகளாக நகை தயாரிப்பில் அனுபவம் கொண்ட இந்நிறுவனம், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கட்ரேலா தலைமையில் செயல்படுகிறது.
புதிய விற்பனையகத்தில் தங்கம், வைரம், பிளாட்டினம், ஜடாவ் மற்றும் வெள்ளி நகைகளின் பிரத்யேக சேகரிப்புகள் இடம்பெறுகின்றன. தேசிய நகை விருதுகள் 2026-ல் வைர வளையல் பிரிவில் இந்நிறுவனம் விருது பெற்றுள்ளது. கோவை ஆர்.எஸ். புரம், ராமச்சந்திரா சாலையில் உள்ள கே.ஆர்.எஸ். டவரில் புதிய விற்பனையகம் அமைய உள்ளது.



