அரசமைப்புச்சட்ட நாளை (நவம்பர் 26) சிறப்பிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஆனி தலைமையிலான குமரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் இன்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தின் முன்பு டாக்டர் அம்பேத்கர் திரு உருவச்சிலைக்கு மாலையிட்டு, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் திருவாளர்கள் வழக்கறிஞர் பிரவீன், ரூபின், அகில், வழக்கறிஞர் ஜெயசிங், அஜித், பிரைட் சிங், கிருஷ்ணன், அஸ்வின், ஸ்டீபன், சுரேஷ், செல்வகுமார், ஆண்டனி மைக்கேல், ஜினிட்டா ஆகிய நிர்வாகிகள் மற்றும் வினு குமார், சமூக ஆர்வலர் ரோஸ் பாபு, வழக்கறிஞர் ரீட்டா ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்



