Homeபிற செய்திகள்பிறவி, மகப்பேறு தொற்று குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்தரங்கம்

பிறவி, மகப்பேறு தொற்று குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்தரங்கம்

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில், பிறவி மற்றும் பேறுகாலத் தொற்றுகள் குறித்த தொடர் மருத்துவக் கல்விக் கருத்தரங்கம் நடந்தது. மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார். கோவை மாசானிக் மருத்துவமனை மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.ராமசாமி சிறப்புரையாற்றினார்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பி.அந்தோணி டெரன்ஸ் வரவேற்றார். டாக்டர் ரமேஷ் நன்றி கூறினார். இதில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள், முதுகலை மாணவர்கள் பங்கேற்று பிறவி தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிதல் குறித்து விளக்கினர்.

படிக்க வேண்டும்

spot_img