கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை, இந்திய மொழியியல் கழகம் (LSI), மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (CIIL) இணைந்து நடத்திய 48-வது சர்வதேச மொழியியல் மாநாடு (ICOLSI–48) மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது.
நவம்பர் 18 முதல் 20 வரை நடந்த மாநாட்டில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 250 பேர் மற்றும் நான்கு வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மொழியியல் ஆய்வுகளின் புதிய முன்னேற்றங்கள் குறித்து 26 இணை அமர்வுகள், மூன்று குழு விவாதங்கள் நடைபெற்றன.
தொடக்க விழாவில் பதிவாளர் பேராசிரியர் ஆர். ராஜவேல் தலைமை வகித்தார். இந்திய மொழியியல் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஜே. வார்சி தொடக்க உரையாற்றினார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முனைவர் அப்பாசாமி முருகையன், பேராசிரியர் ஜி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவு விழாவில் வாசு ரங்கநாதன், ராஜேந்த் மெஸ்த்ரி, எல். ராமமூர்த்தி, சுரேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



