கோவை, ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நிகழ்வு இன்று காலை ராம்நகரில் உள்ள மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
இந்த வாக்கத்தான் நிகழ்வை கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3206, இந்திய மருத்துவச் சங்க கோவைகிளை, ஆர்எஸ்எஸ்டில் தமிழ்நாடு கிளை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் டயாபடீஸ் அவர்னஸ் கமிட்டி ஆகியவை இணைந்து நடத்தினர்.
இந்த வருடத்திற்கான கருத்தாக்கமாக நீரிழிவு நோய் தொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல் என்ற கருப்பொருளில் இந்த வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது.
இந்த வாக்கத்தான் ராம்நகரில் துவங்கி விவேகானந்தா சாலை, ஹோட்டல் சிட்டி டவர், டாக்டர் நஞ்சப்பா ரோடு வழியாக நேரு ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
இந்த வாக்கத்தான் நிகழ்வை ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர் எஸ் மாருதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக 2028 – 2029 ஆண்டுக்கான மாவட்ட கவர்னர் ரோட்டேரியன் சஞ்சீவிகுமார், ரோட்டரி மாவட்டம் 3206 மாவட்ட இயக்குனரும் முன்னாள் ஏர் வைஸ் மார்சலமான ரோட்டேரியன் டாக்டர் என்.விஜயகுமார், இந்திய மருத்துவ சங்க கோவை கிளயின் தலைவர் டாக்டர் பி.கோசல் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய் சிட்டி தலைவர் டாக்டர் ஆர்.பாலமுருகன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக் சிட்டி தலைவர் முகமது சஃபி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மில்லினியம், தலைவர் கே.சுந்தரமூர்த்தி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் லெஜன்ட் தலைவர் ராம் ஸ்ரீனிவாசன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜெனித் தலைவர் அகிலன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் தலைவர் டாக்டர் ஆர்.டீ.நரேந்திரகண்ணன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஐகான்ஸ் தலைவர் டாக்டர் சுந்தர்ராஜ்,
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சங்கமம் தலைவர் கே.சக்திவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த வாக்கத்தான் நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவியர் என சுமார் 750 பங்கேற்றனர்.



