பாரத ஸ்டேட் வங்கியின் கோவை போத்தனூர் கிளை சார்பில் தேசிய அளவில் நடத்தப் பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மெகா முகாம் நடை பெற்றது. போத்தனூர் மெயின்ரோடு பாத்திமாஸ் மினி ஹாலில் நடைபெற்ற இந்த முகாமை வங்கியின் கோவை நிர்வாக அலுவலக துணைப் பொது மேலாளர் அருண் எஸ்.எல். தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு இந்திய அரசு பணியா ளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை கீழ்நிலை செயலர் (Under Secretary) சஞ்சய் பார்தி தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி, பொள்ளாச்சி மண்டல அலுவலகத்தின் மண்டல மேலாளர் பிருத்விராஜ் சேத்தி, பெங்களூரு உடைய் (UIDAI) பிரிவு அலுவலர் பிரகாஷ் பாபு, கோவை நிர்வாக அலுவலக முதன்மை மேலாளர் (மனித வளம்) வி.மோகன் குமார், போத்தனூர் கிளை மேலாளர் கே.மகேஸ்வரன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர். நிகழ்வில் ரயில்வே ஓய்வூதிய தாரர்கள் சங்கங்களின் தலை வர்கள் மணிலால் காந்தி, பழனிசாமி, தங்கப்பன், இபிஎப்ஓ ஓய்வூதி யதாரர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ராஜன் ஆகியோர் கௌர விக்கப்பட்டனர்.
துணைப் பொதுமேலாளர் அருண்.எஸ்.எல். பேசுகையில், முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை எளிய முறையில் சமர்ப்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஜீவன் பிரமாண் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று கூறிய அவர், பாரத ஸ்டேட் வங்கிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். ஓய்வூதியதாரர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய அரும் பணிகளையும் அருண்.எஸ்.எல் நினைவு கூர்ந்து பாராட்டினார்.
இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். நிறைவாக வங்கியின் பொள்ளாச்சி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் பிரசூன் நன்றி கூறினார். முகாமையொட்டி, ஓய்வூதியதாரர்களுக்காக கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



