செங்கல்பட்டில் 100 முதல் 150 ஏக்கரில் ரூ.7,000 கோடி மதிப்பில் உலக வர்த்தக மையம் அமைக்க GTB டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு வேர்ல்ட் டிரேட் சென்டர்ஸ் அசோசியேஷன் உரிமம் வழங்கியுள்ளது.
பத்து ஆண்டுகளில் பல கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தரவு மையங்கள் அமைய உள்ளன. GTB தலைவர் பாரத் காந்தி தோஷி, நிர்வாக இயக்குநர் அருண் பாரதி அருணாசலம்,WTCA ஆசிய -பசிபிக் துணைத் தலைவர் ஸ்காட் வாங் ஆகியோர் திட்ட விவரங்களை தெரிவித்தனர். மேலும், காஞ்சிபுரத்தில் 500 ஏக்கரில் தொழில்சார் உலக வர்த்தக மையம் அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



