கேரள மாநிலம் அட்டப் பாடி வடகோட்டத்தறாவில், கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன மும், பாலக்காடு வேளாண் அறிவியல் மையமும் இணைந்து நவ.5-ல் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தின.

இதில் மண் ஈரப்பதங்காட்டி (SMI) கருவி மூலம் தேவைக்கேற்ப பாசனம் செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப் பட்டது. முகாமில் முனைவர் எம்.இஸ்ரேல் தாமஸ், முனைவர் டி.புத்திர பிரதாப் ஆகியோர் பேசினர். முனைவர் டி.ராமசுப்பிரமணியன், முனைவர் டி. இலக்ஷ்மிபதி, டாக்டர் ஜிஜி ஆலன், டாக்டர் அஞ்சு கே.பேபி ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்க மளித்தனர்.

இந்நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாணவர்கள் பங்கேற்றனர். மண் ஈரப்பதத்தை நிறங்களின் மூலம் காட்டும் இக்கருவி, நீர் விரயத்தைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டது.



