கோவை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 14 மீனவ பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பிலான குளிர் காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.

மத்திய அரசின் பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.75,272. இதில் 40 சதவீத மானியமாக பயனாளி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி, மீன்வள ஆய்வாளர் முகமது பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



