கோவையில் சிஎஸ்ஐ திருமண்டல மகளிர் ஐக்கியம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் 1,500-க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பெண்களின் ஆன்மிக வளர்ச்சி, ஒற்றுமை, தலைமைத்து வம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில், சிஎஸ்ஐ திருமண்டல மகளிர் ஐக்கியம் சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, “அரசியாக முடிசூட்டப்பட அழைக்கப்பட்ட வர்கள்” என்ற கருப்பொருளில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை, திருப்பூர், நீலகிரி உள் ளிட்ட பகுதிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மகளிர் ஒரே மாதிரியான சீருடை அணிந்து பங்கேற்றனர்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் இருந்து மகளிர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது. கோவை திருமண்டல பிஷப் பிரின்ஸ் கால்வின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை, கோவை திருமண்டல மகளிர் ஐக்கியத் தலைவர் ஐடா கால்வின் மற்றும் சென்னை திருமண்டல மகளிர் ஐக்கியத் தலைவர் இந்திரா பால் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இதில் பங்கேற்ற மகளிர், தலை மைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்க ளிடம் பேசிய ஐடா கால்வின், பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்பட உள்ளதாகவும், கிராமப்புறங்களில்
வசிக்கும் ஏழை, எளிய பெண்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வுக்கான பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.



