பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட தொழில் மையத்தால் நடத்தப்பட்ட MSME
விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் வங்கி பங்கேற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கே.இளம்பகவத், வங்கியின் சேலம் மெய்யனூர் சாலை கிளை மேலாளர் பிரதீப் ரௌத் ஆகியோர் முன்னிலையில், ஜி.கே. டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.3.36 கோடி கடன் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.



