Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் உறுப்பினர் கல்வித் திட்ட விழா

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் உறுப்பினர் கல்வித் திட்ட விழா

நீலகிரி மாவட்டம் மூரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பிகட்டி கிராமத்தில் உறுப்பினர்க ளுக்கான உறுப்பினர் கல் வித்திட்ட விழா மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்றது.

முல்லிகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ரகு வரவேற்றுப் பேசினார். பிகட்டி ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன், மூரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராஜகோ பாலன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். நீலகிரி மாவட்ட கூட்டு றவு ஒன்றியத்தின் செய லாட்சியர்/ கூட்டு றவு சார்பதிவாளர் கௌரி சங்கர் முன்னிலை வகித்து பேசுகையில், கூட்டுறவு துறை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் தொடர்பான திட்டங்கள், கூட்டுறவு வங்கி யின் டிஜிட்டல் சேவைகள், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சேவைகள் குறித்தும் கூட்டுறவு இயக்க வரலாறு, கூட்டுறவு இயக்கம் கொள்கைகள், கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் வழங் கப்படும் கடன்கள் குறித்தும் அவர் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என்னென்ன கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என மேற்பார்வையாளர் மணிகண்டன் மற்றும் சங்க எழுத்தர் நளினி ஆகியோர் விளக்கிக் கூறினார்.

இறுதியாக சங்கத்தின் விற்பனையாளர் சந்தோஷ் நன்றி கூறினார். இந்த கல்வி திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் (NHFDC) கடன் இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் மத்திய கால கடன் இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் மொத்தம் ரூ.2 லட்சம் கடனுதவி ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். ஊர் பொதுமக்கள், சங்க உறுப்பினர்கள், சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img