Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளி மாணவர்களுக்கான ‘சுரக்ஷித் மார்க் 2026’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வுப் பதாகையையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், இணைப் போக்குவரத்து ஆணையர் சுரேஷ், துணைப் போக்குவரத்து ஆணையர் தாமோதரன், மாநில சாலைப் பாதுகாப்புப் பொறுப்பு அலுவலர் பன்னீர்செல்வம், ஆதர்ஷ்குமார் ஜி. நாயர், கண்ணன், பேராசிரியர் டாக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சத்தியகுமார், விஸ்வநாதன், செந்தில் குமார், பூங்கோதை, பிரதீபா, ரமேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் சாலை விதிகளைப் பின்பற்றுவதுடன், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமும், கார்களில் இருக்கைப் பட்டையும் அணிவதன் அவசியத்தை குடும்பத்தினருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img