கோவை நிர்மலா மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு) மற்றும் நல்லாயன் அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரிச் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் வாழ்த்துகளுடனும், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா தலைமையிலும் விழா நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. மகேஸ்வரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் பாரதி ஆய்வாளர், இயக்குநர், எழுத்தாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், கண்ணதாசனின் படைப்புகள் குறித்து சிறப் புரையாற்றினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.நல்லாயன் அறக்கட்டளை நிறுவனர் அரிமா ஜான் பீட்டர் சிறப்புரையாற்றினார்.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு. இராமதிலகம் நன்றியுரையாற்றினார்.
விழாவில் 800-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவியர் பங்கேற்றனர்.



