தூத்துக்குடி தூய யூதா ததேயு திருத்தல 53ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்பணி ஆரோக்கியதாஸ் (மறை மாநில அதிபர், மதுரை) தலைமை தாங்கி கொடியேற்றி மறையுரையாற்றினார்.
தொடர்ந்து திருவிழாவில் தினமும் காலை 6:30 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறும். முக்கிய நிகழ்வான 11-ம் திருவிழா வரும் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு தலைமை தாங்கி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி மறையுறை ஆற்றுகிறார். தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு புனிதரின் ஆடம்பர தேர் பவனியும் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறும்
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஜான் அருமைநாதன், பிரின்ஸ், ததேயு, ஜான் பீட்டர் மற்றும் பங்குப்பேரவை, பங்கு மக்கள், தூய யூதா ததேயு பக்தர்கள் செய்துள்ளனர்.



