Homeபிற செய்திகள்அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி கோவையில் இலவச மருத்துவ முகாம்

அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி கோவையில் இலவச மருத்துவ முகாம்

முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை நேருநகர் லயன்ஸ் சங்கம், ரத்தினம் குளோபல் யுனிவர்சிட்டி, கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை, பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம் நேற்று (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு ரத்தினம் கல்லூரி வளாகத்தில் சி.வி.ராமன் கட்டிடத்தில் நடைபெற்றது.
விஷன் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் ரத்தினம் கல்லூரி நிர்வாக மேலாண்மை துறைத் தலைவர் டாக்டர் வி.கௌசல்யா தேவி மற்றும் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி ஜி.எம்.டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் தர்மம் செய் ஆண்டின் மாவட்ட ஆளுநர் பி.எஸ்.செல்வராஜ், முன்னாள் மாவட்ட
ஆளுநரும் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பழனிச்சாமி , முதலாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி.நந்தகோபால், ரத்தினம் குளோபல் யுனிவர்சிட்டி டிரஸ்டி டாக்டர் சீமா செந்தில் ஆகியோர் இணைந்து முகாமைத் துவக்கி
வைத்தனர்.
மகளிர் தின மாவட்ட தலைவர் சுப்பு செந்தில் குமார், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் முகாமுக்கான ஏற்பாடுகளை நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், சூரிய பிரகாஷ், கிரீஸ் லியோ, மாவட்டத் தலைவர் ஜெட்டின், வாசன் கண் மருத்துவமனை பிஆர்ஓ பாபு, வி.எஸ். பல் மருத்துவமனை பி.ஆர்.ஓ சுனில் மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ முகாமில் பயன்பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img