உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜே. செல்வம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், எல்சேவியர் நிறுவனம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலில், உலக அளவில் 56,663-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் இந்திய அளவில் 74-வது இடத்தையும், தமிழகத்தில் புவியியல் துறையில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இவரது ஆராய்ச்சிகளுக்கு 6,100-க்கும் மேற்பட்ட மேற்கோள்கள் கிடைத்
துள்ளன.
இவரது சாதனையைப் பாராட்டி, கல்லூரிச் செயலர் ஏ.பி.வி.சி. சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.



