Homeபிற செய்திகள்இளைஞர்களுக்கு 6 மாத நிர்வாகப் பயிற்சி : கேஜிஎஃப் திட்டம் தொடக்கம்

இளைஞர்களுக்கு 6 மாத நிர்வாகப் பயிற்சி : கேஜிஎஃப் திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் கனிமொழி சந்தோஷ் முன்னெடுத்துள்ள கேஜிஎஃப் (Kavundam palayam Governance Fellowship) திட்டம், அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

காமராஜர் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் ஆறு மாதங்கள் எம்.எல்.ஏ.,வுடன் இணைந்து பயணித்து, அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள உள்ளனர்.

இதன் தொடக்கமாக, இளைஞர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி தெரிவித்த கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., இப்பயிற்சி இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img