கோவை காந்திபுரத்தில் நவீன முறையில் கட்டப்பட் டுள்ள பெரியார் அறிவுல கம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ. 301 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட் டுள்ளது பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம். கடந்த 2024 ஆம் ஆண்டு முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் பொதுப்பணித் துறையால் 2026ல் பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக் கப்பட்டுள்ள இந்த அறிவு லகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ நூலகம், 350 பேர் அமரக் கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவி யல் உபகரணங் களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வச திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், விண் வெளி குறித்த நேரடி அனுபவத்தை பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இடம்பெற்றுள் ளன. ஒவ்வொரு தளத்தி லும் நூலகம் மற்றும் அறிவி யல் சார்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம (டிஜிட்டல்) நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆராய்ச்சி படிப் பகங்கள், குழந்தைகள் நூலகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன்’ மையம் ஆகியவையும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
பெரியார் அறிவுல கத்தை திறந்து வைப்பதற் காக முதல்வர் விஜய் இன்று காலை சென்னை யில் இருந்து தனி விமா னத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்தி புரத்துக்கு 11 கிலோ மீட் டர் தூரம் ரோடு ஷோ சென்றபடி மக்களை சந்தித்தார். அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

முதல்வராக விஜய், பதவியேற்ற பின் கோவையில் நடை பெறும் அரசு விழாவில் முதன் முறையாக பங்கேற்பதால் அவரை வரவேற்கவும், பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதி கமாக கூடினர்.
முதல்வர் விஜய்க்கு காந்திபுரம் வரை சாலை யின் இருபுறமும் திரண்டு பொதுமக்கள், த.வெ.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் வருகையால் கோவையில் 4,030 போலீ சார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பகல் 12 மணியளவில் காந்திபுரம் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார். நூலக முகப்பில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலக கல்வெட்டை திறந்துவைத்தார். இதையடுத்து அங்குள்ள படைப்புகளை அவர் பார்வையிட்டு வருகிறார்.

தொடர்ந்து கோவையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். கோவையில் ரூ.408.25 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை அவர் திறந்துவைத்தார். கோவையில் ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் விஜய் அடிக் கல் நாட்டினார். ரூ.34.72 கோடியில் 9,343 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கவுள் ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ் மோகன், சம்பத்குமார், விக் னேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



