Homeபிற செய்திகள்குழந்தை திருமணத் தடுப்புக்கு மாபெரும் கையெழுத்து இயக்கம்

குழந்தை திருமணத் தடுப்புக்கு மாபெரும் கையெழுத்து இயக்கம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் உறுதிமொழியை வாசிக்க வைத்து, மாபெரும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை 2011-ல் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதிசெய் தல், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைக் கவனத்தில் கொள்ளுதல் ஆகியவை இதன் நோக்கம்.
பெண் குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் சம உரிமை வழங்கவும், குழந்தைத் திருமணத்தை முழுமையாக ஒழிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர்.
குழந்தைத் திருமணம் நடத்தப்படுவதாகத் தெரிந்தால், உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண்ணிலோ அல்லது தொடர்புடைய அரசு அலுவலர்களிடமோ தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரினார்.
பெண் குழந்தைகளின் பிறப்பையும் பாதுகாப் பையும் ஆதரிக்கவும், கருவில் வளரும் சிசுவின் பாலினத்தைக் கண்டறியவோ கருக்கொலை செய்யவோ முயலாமலும், பெண் குழந்தைகளுக்குக் கல்வியில் பாகுபாடின்றி சம வாய்ப்பு அளிக்கவும், குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும் அரசு அலுவலர்களும் பணியாளர்களும் உறுதிமொழி எடுத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img