தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.,சை தொழில்துறையினர் சென்னையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், மின்சார கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது: குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும். 150 கிலோவாட் வரை ஒரே நிலைக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 1 மெகாவாட் வரை உயரழுத்த மின் இணைப்புக்கான கிலோவாட் கட்டணத்தை ரூ.608-ல் இருந்து ரூ.304 ஆக குறைக்க வேண்டும்.
மேலும், கூரை சோலார் மின் உற்பத்திக்கான நெட்வொர்க் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஆணைய தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினார்.



