உலக இதய தினத்தை முன்னிட்டு, வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சார்பில் ‘சிம்ஸ் ரிதம் ஆஃப் லைஃப்’ என்ற 5 கி.மீ. விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய நடைபயணத்தை துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி, மூத்த இயக்குநர் மற்றும் மூத்த இதய நோய் மருத்துவ ஆலோசகர் டாக்டர் கே. ஜெய் சங்கர், இயக்குநர் மற்றும் மூத்த இதய நோய் மருத்துவ ஆலோசகர் டாக்டர் டி.எஸ். ஸ்ரீநாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதய நோய் தடுப்பு, ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



