சங்ககிரியில் 10,000 சதுர அடி பரப்பளவில் புதிய விநியோக மையத்தை பி.கே.டி. டயர்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஸ்ரீ ஜெயந்தி ரோட்வேஸ் நிறுவனம் இயக்கும் இந்த மையம் மூலம் சேலம், சங்ககிரி, நாமக்கல், ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 8 முக்கிய சந்தைகளுக்கு பி.கே.டி. டயர்கள் கிடைக்கச் செய்யப்படும்.
பி.கே.டி. டயர்கள் பொருத் தப்பட்ட 7 வணிக வாகனங்களின் அணிவகுப்பும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 3,300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பி.கே.டி. நிறுவனத்தின் இயக்குனர் சதீஷ் சர்மா, வணிக வாகன ரேடியல் டயர்கள் தேசிய விற்பனைத் தலைவர் அமித்குமார் அகர்வால், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, சங்ககிரி தாலுகா பேருந்து உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் சண்மு கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



