Homeபிற செய்திகள்உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு ஆர்எக்ஸ் வடிவில் மாணவர்கள் அணிவகுப்பு

உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு ஆர்எக்ஸ் வடிவில் மாணவர்கள் அணிவகுப்பு

உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு, ஊட்டி ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெள்ளை உடையில் திரண்ட மாணவ மாணவிகள், மருந்துச் சீட்டுகளில் பயன்படுத்தப்படும் ‘ஆர்எக்ஸ்’ குறியீடு வடிவில் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் தலைமை வகித்து, மருந்தாளுநர்களின் பங்கு குறித்து பேசினார். பேராசிரியர்கள் டாக்டர் கணேஷ், டாக்டர் பாபு, டாக்டர் வடிவேலன், டாக்டர் காளிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img