Homeபிற செய்திகள்வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கான்சாகிப் வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கான்சாகிப் வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து வெள்ள சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய், ஓடைகள் உள்ளிட்டவற்றை தூர்வாரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி சிதம்பரம் அருகே முத்தையா நகரில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் ஓடையில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியை கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் மேற்பார்வை யிட்டு செய்து வருகின் றனர்.

படிக்க வேண்டும்

spot_img