கே.ஜி. சாவடியில் உள்ள தானிஷ் அஹ்மத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜிகேஎன்எம் மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சுகாதாரம், மாணவர் மேம்பாடு, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் இணைந்து செயல்படும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தானிஷ் அஹ்மத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி தமீஸ் அஹ்மத், இயக்குனர் டாக்டர் அருள் குழந்தைவேல், ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி ரகுபதி வேலுசாமி, மருத்துவ இயக்குனர் டாக்டர் ராகவேந்திரா, தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சந்திரசேகரன், எஸ்.பி.ஓ வினித் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் மாணவர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.



