சென்னை ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 17-வது பட்ட மளிப்பு விழா நடந்தது. இதில் 2,732 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேந்தர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தலைமை வகித்தார்.
இன்டெல் இந்தியா தலைவர் கோகுல் வி. சுப்பிரமணியம், கட்டிடக் கலைஞர் டாக்டர் ஆஸ்கார் கன்செஸ்ஸாவோ ஆகியோ ருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
2025-26 கல்வியாண்டில் 257 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றதில், 85.60 சதவீத மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். சராசரி ஆண்டு வருமானம் ரூ.4.75 லட்சமாகவும், அதிகபட்சம் ரூ.12 லட்சமாகவும் இருந்தது.
எதிர்காலத் திறன் களுக்கான ஹிந்துஸ்தான் மையத்தை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் திறந்து வைத்தார்.



