Homeபிற செய்திகள்கோவையில் பி.எஸ்.ஜி, ஏ.வி.பி. ஒருங்கிணைந்த மருத்துவ மையம் துவக்கம்

கோவையில் பி.எஸ்.ஜி, ஏ.வி.பி. ஒருங்கிணைந்த மருத்துவ மையம் துவக்கம்

பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஆர்ய வைத்திய பார்மசி இணைந்து, நவீன மருத்துவம், ஆயுர்வேதம், யோகா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மருத்துவ மையத்தை கோவையில் தொடங்கியுள்ளன.

பி.எஸ்.ஜி. மருத்துவமனை ஏ-பிளாக் 4-வது தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தில், நோயாளிகளின் தேவைக்கேற்ப நவீன மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யோகா நிபுணர்கள் இணைந்து ஆலோசனை வழங்குவர்.

தொடக்க நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன், ஏ.வி.பி. நிர்வாக இயக்குனர் சி. தேவிதாஸ் வாரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img