Homeபிற செய்திகள்கோவையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு

கோவையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் ஓய்வு பெறும் ஆசிரியர்களைப் பாராட்டும் விழா, கோவை எட்டிமடை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கணினி பயன்பாடுகள் மற்றும் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் பேராசிரியர் ஜெ. காந்திராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர் ஏ. சேவியர் செல்வகுமார் வரவேற்றார். 50-க்கும் மேற்பட்ட ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கே. விஜயராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

AIFUCTO முன்னாள் தேசியச் செயலாளர் டாக்டர் பி. ஜெயகாந்தி, சங்க முன்னாள் தலைவர் பேராசிரியர் உ.மு.ரவிச்சந்திரன், MUTA–வைச் சேர்ந்த பி. சிவஞானம் ஆகியோர் பேசினர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தலைவர் வேலு ஆசிரியர்களை கவுரவித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் ஏற்புரை வழங்கினார். பொருளாளர் டாக்டர் ஜெ. சார்லஸ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img