ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில், மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் நிகழ்ச்சியின் 6-வது பதிப்பு நேற்று தொடங்கியது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் தொடங்கி வைத்தார். இதையொட்டி, கோவையைச் சேர்ந்த குரோ ஐடெக், பெங்களூரைச் சேர்ந்த ஸ்கீமேட்டிக் இன்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் மற்றும் கல்லூரி யின் இயந்திரப் பொறியியல் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி யில் 22 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் பங் கேற்றுள்ளனர். மொத்தம் 23 அணி கள், 1 கிலோ வாட் மற்றும் 2 கிலோ வாட் என இரு பிரிவுக ளில் போட்டியிடுகின்றன.



